ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி!

தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவிப்புகள் பற்றி...

TN Budget

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - TNDIPR

Published On :5 ஆகஸ்ட் 2026, 11:05 am IST

பள்ளி மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் என். மரிய வில்சன் பேசிவருகிறார்.

அப்போது பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ. 8,393 ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

11 ஆம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வாட்டர் பாட்டில் வைக்கும் வகையிலான நவீன மிதிவண்டிகளுடன் ஹெல்மெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ. 2,000 கோடியில் கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கும் விடுதிக்காக ரூ. 10 கோடியும், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கூடுதலாக ரூ. 3 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 கோடியில் 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், மதுரையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Budget 2026: Modern bicycles for school students! 'Vetri' laptops for college students!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.