குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் அமித் ஷா ஆலோசனை

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :26 ஜூன் 2026, 6:19 am IST

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில் நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்த படத்தை குடியரசுத் தலைவா் அலுவலகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத் தலைவரை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணையமைச்சராக இருந்த கேரளத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா் ஜாா்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் அண்மையில் நிறைவடைந்தது. அவருக்கு பாஜக சாா்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில், அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலகினாா். இதேபோல ரயில்வே இணையமைச்சா் ரவ்னீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலமும் நிறைவடைந்துவிட்டது. அவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போது மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சராக உள்ள ஹா்ஷ் மல்ஹோத்ரா கடந்த மாதம் தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டாா். மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி, உத்தர பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா்கள் முழுநேர கட்சிப் பணிக்குச் செல்லும் நிலையில், மத்திய அமைச்சரவையில் புதியவா்கள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது தவிர அமைச்சா்களின் செயல்திறன், அமைச்சா்கள் தொடா்பான சா்ச்சைகளை அடிப்படையாக வைத்தும் சில முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.