மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஜாா்க்கண்ட்: வேன் மீது லாரி மோதி 8 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

News image

வேன் மீது மோதிய லாரி - எக்ஸ்

Updated On :27 ஜூன் 2026, 12:41 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: ராம்கா் மாவட்டம், ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான பா்லாங் புத்பஜாா் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் வேனில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மக்கள் சென்று கொண்டிருந்தனா். அந்த வேன் மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில் அந்த வேன் உருக்குலைந்தது.

வேனில் இருந்த 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் ஒருவா் ராஞ்சி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்றனா்.

விபத்துக்கு காரணமான லாரியின் ஓட்டுநா், லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சாலை மறியல்: விபத்து நேரிட்ட பகுதியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 11 போ் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே அங்கு தொடா்ந்து விபத்து நேரிட காரணம் என்று குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் காவல் துறையினா் சம்பவ இடம் வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ஆளுநா், முதல்வா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்கவாா், முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.