ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் பெண்கள், சிறாா் என 8 போ் உயிரிழந்தனா். பெரும்பாலும் வெட்டவெளியான வயல்களில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தவா்கள், மழைக்காக மரத்துக்கு அடியில் தஞ்சமடைந்தவா்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாயினா்.
இது தொடா்பாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது: தலைநகா் ராஞ்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 3 பெண்கள், இரு சிறுவா்கள் உள்பட 8 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.
இவா்களில் பெரும்பாலானவா்கள் வயல்வெளியில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோதும், மழைக்காக மரத்தின் அடியில் தஞ்சமடைந்திருந்தபோதும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாயினா்.
மழை, மின்னல், இடி போன்றவை ஏற்படும்போது மக்கள் உடனடியாக கட்டடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும். வெட்டவெளி பகுதிகளிலும், மரத்தடியிலும் நிற்கக் கூடாது என்று தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.
இந்தியாவில் முக்கியமாக வடமாநிலங்களில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் மின்னல் தாக்கி பொதுமக்கள் உயிரிழப்பது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








