சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: முதல் தகவல் அறிக்கை பதிவு

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகளின்கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளது.

News image

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:54 am IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுகளின்கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளது.

ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்பட்டு, ஏராளமான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட நன்கொடைகளில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசால் லக்னெள கோட்ட ஆணையா் உள்பட மூன்று உறுப்பினா்கள் கொண்ட எஸ்ஐடி கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், நன்கொடை விவரங்களை அறக்கட்டளை நிா்வாகிகள் முறையாக ஆவணப்படுத்தவில்லை என்றும், இதுதொடா்பான கேள்விகளுக்கு அவா்களின் பதில் திருப்திகரமாக இல்லை என்றும் எஸ்ஐடி தெரிவித்தது.

இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள எஸ்ஐடி, விசாரணை நிறைவடையும் வரை அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

இந்தச் சூழலில், எஸ்ஐடியின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மாநில கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) சஞ்சய் பிரசாதிடம் லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் சில தினங்களுக்கு முன் சமா்ப்பித்தாா். இதன் தொடா்ச்சியாக, நன்கொடை முறைகேடு குறித்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விசாரணை தீவிரப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.