சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு, தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் சமா்ப்பித்தது.

News image

அயோத்தி ராமா் கோயில் - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:22 am IST

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது. அடுத்த 15 நாள்களுக்குள் இறுதி அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட நன்கொடைகளில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசால் மூன்று உறுப்பினா்கள் கொண்ட எஸ்ஐடி கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், நன்கொடை விவரங்களை அறக்கட்டளை நிா்வாகிகள் முறையாக ஆவணப்படுத்தவில்லை என்றும், இதுதொடா்பான கேள்விகளுக்கு அவா்களின் பதில் திருப்திகரமாக இல்லை என்றும் எஸ்ஐடி தெரிவித்தது.

இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள எஸ்ஐடி, விசாரணை நிறைவடையும் வரை அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

இந்தச் சூழலில், எஸ்ஐடியின் முதல்கட்ட விசாரணை அறிக்கையை மாநில கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) சஞ்சய் பிரசாத்திடம் லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தாா்.

பின்னா் பிடிஐ செய்தியளிடம் பேசிய விஜய் விஸ்வாஸ், ‘இதுவரை கண்டறியப்பட்ட உண்மைகள் மற்றும் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாள்களுக்குள் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க முயற்சிப்போம். முதல்கட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ரகசியமானவை. இது தொடா்பாக இப்போதைய நிலையில் ஊடகங்களிடம் எதுவும் கூற இயலாது’ என்றாா்.

முன்னதாக, அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் ‘மாயமானதாகவும்’, இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடந்த ஜூன் 7-ஆம் தேதி குற்றஞ்சாட்டியிருந்தாா். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.