நிதி முறைகேடு தொடர்பான பணமோசடி விசாரணையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கல்விச் சமூக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கப்பணம், தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஆஸ்தா ஃபவுண்டேஷன் ஃபார் எஜுகேஷன் சொசைட்டி மற்றும் சௌக்சி குடும்பத்துடன் தொடர்புடைய எல்என்சிடி குழுமத்திகற்கு எதிராக அமலாக்கத் துறை ஜூன் 23 முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனது.
சௌக்சி குழுமத்துடன் தொடர்புடைய குடியிருப்பு வளாகங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டது.
கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்
குறிப்பிட்ட கல்விச் சங்கத்திற்குச் சொந்தமான நிதியை முறைகேடு செய்தது மற்றும் வேறு நோக்கங்களுக்கு மாற்றியது உள்ளிட்ட பெரிய அளவிலான நிதி முறைகேடு தொடர்பாக, மாநிலக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஜெயநாராயண் சௌக்சி மற்றும் பிறர் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
சௌக்சி, மாநிலத்தின் முன்னணி கல்வி நிறுவனக் குழுமமான 'எல்என்சிடி' குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அக்குழுமத்தின் கருத்து இன்னும் வெளியாகவில்லை.
மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம், கல்வி உதவித்தொகை மானியங்கள் அதன் நிறுவனங்களின் பெயரில் பெறப்பட்ட வங்கிக் கடன்கள் ஆகியவை, குற்றம் சாட்டப்பட்டவர்களால் கட்டுப்படுத்தப்படும் தொடர்புடைய அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மாற்றிவிடப்பட்டதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சோதனையின்போது ரூ. 3.97 கோடி ரொக்கம், ரூ. 3.45 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், நிதிப் பதிவுகள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது. இருப்பினும், இந்தச் சொத்துகளின் உரிமையாளர் யார் என்பது குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.
The Enforcement Directorate on Thursday said it seized Rs 3.97 crore in cash and gold jewellery worth Rs 3.45 crore following searches against a Madhya Pradesh-based educational society in a money laundering investigation linked to alleged misappropriation of funds.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலிடெக்னிக் விரிவுரையாளா் தோ்வு முறைகேடு: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ரூ. 142 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: மூன்று மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan





