மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

இந்திய கடவுச்சீட்டுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறித்து...

News image

கடவுச்சீட்டு - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 10:12 pm IST

இந்திய கடவுச்சீட்டுக்கான (பாஸ்போர்ட்) கட்டணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 36 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்கான விண்ணப்பக்கக் கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 60 பக்கங்கள் கொண்ட கடவுச்சீட்டின் கட்டணம் ரூ. 2,000 லிருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், அவசரத் தேவைக்கான `தட்கல்' கடவுச்சீட்டின் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

60 பக்கங்கள் கொண்ட புதிய அல்லது மறுவழங்கல் `தட்கல்' கடவுச்சீட்டின் முன்பிருந்த கட்டணத் தொகையான ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டுகள் மற்றும் தட்கல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து கட்டண உயர்வும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Ministry of External Affairs has increased the fee for Indian passports.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.