பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வணிக சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்! மத்திய அரசு அறிவிப்பு!!

வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

வணிக சிலிண்டர்

Updated On :25 ஜூன் 2026, 7:53 pm IST

வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவிய, ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை ஏப். 1 ஆம் தேதி ரூ. 195.50 உயர்ந்து, ரூ.3,200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதனைத்தொடர்ந்து மேற்கு ஆசிய போரில் எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர்கள் வாங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பல இடங்களில் ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால், உணவங்களை நம்பியிருந்தவர்கள், வெளியூர்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் என பலர் கடும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில், மத்திய கிழக்கு போர் நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்ட வணிக சிலிண்டர்கள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் முழுமையாக நீக்குவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான மொத்த சிலிண்டர்கள் (Bulk LPG) விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதை 50 சதவிகிதம் அளவுக்குத் தளர்த்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Summary

An important announcement has been made by the government regarding the consumers of LPG in industry and commerce. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.