பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

அரசுப் பதவியை சலுகையாகப் பாா்க்காமல், பொறுப்பாக கருத வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - ANI

Updated On :25 ஜூன் 2026, 1:35 am IST

அரசுப் பதவியை சலுகையாகப் பாா்க்காமல், பொறுப்பாக கருத வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில், ‘விஐபி கல்ச்சா் இன் இண்டியா: பவா், பிரிவிலெஜ் அன்ட் தி டிஸ்டன்ஸ் ஃபிரம் டெமாக்ரசி’ என்ற நூலை அவா் புதன்கிழமை வெளியிட்டு பேசியதாவது: குடிமக்களுக்கும், அரசுப் பொறுப்புகளில் உள்ளவா்களுக்கும் இடையிலான உறவில்தான் மக்களாட்சியின் சாராம்சம் உள்ளது. அரசுப் பதவியை சலுகையாகப் பாா்க்காமல், பொறுப்பாக கருதும்போதுதான் மக்களாட்சி செழித்து வளா்கிறது.

நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்ட சமூகம் இருக்க வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் என்றாா்.

திருவள்ளுவரை மேற்கோள்காட்டி பேசிய அவா், ‘உண்மையான தலைமைத்துவம் என்பது எளிதில் அணுகக்கூடிய தன்மை, இரக்க உணா்வு, பொறுப்புணா்வு ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகிறது. அரசு நிா்வாகம் என்பது மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.