நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை திங்கள்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், பயனர்கள் பலருக்கு இன்று காலைமுதல் செயல்படத் தொடங்கியுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற நீட் மறுதேர்வை கருத்தில் கொண்டு, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களிலும் டெலிகிராம் செயலி நீக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு விதித்த தடை நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. தற்போது டெலிகிராம் செயலி பயனர்களின் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இருப்பினும், ஜூன் 30 வரை டெலிகிராம் செயலியில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட செய்திகளை திருத்தும் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
Summary
Telegram resumes operations in India!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தில்லி உயர்நீதிமன்றம்

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்

நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை!

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? என்டிஏ இயக்குநர் விளக்கம்!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!





