நீட் மறுதேர்வை முறையாக நடத்துவத்துவதற்காக டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து என்டிஏ இயக்குநர் அபிஷேக் சிங் செவ்வாய்க்கிழமை (ஜுன் 16) விளக்கம் அளித்துள்ளார்.
நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவதை தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை விதித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று காலை உத்தரவிட்டது.
இதுகுறித்து அபிஷேக் சிங் பேசியதாவது:
மோசடிக்காரர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்கள் சிலர் போலி வினாத்தாள்களை உண்மையானவை என்று கூறிப் பகிர்ந்து, அவற்றுக்குப் பணம் செலுத்துமாறு மக்களை ஏமாற்றி வருகின்றனர். மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக டெலிகிராம் செயலியைத் தவறாகப் பயன்படுத்தி வந்ததால் இந்தக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது.
எனவே, நாங்கள் டெலிகிராம் அதிகாரிகளைச் சந்தித்து, ”இது கசிந்த நீட் வினாத்தாள்” என்று கூறும் எந்த ஒரு குழுவையும் உருவாக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். இதனால், நாங்கள் 200 குழுக்களை முடக்க வேண்டியிருந்தது. ஆனால், சில நேரங்களில் நடவடிக்கை மேற்கொள்வதற்குள் சிலர் ஏமாற்றப்படுகின்றனர்.
மே 3 ஆம் தேதி தேர்வின்போதும் இதுதான் நிகழ்ந்தது. சில டெலிகிராம் சேனல்கள் மே 1 ஆம் தேதியே மே 3 ஆம் தேதிக்கான உண்மையான வினாத்தாள் பகிரப்பட்டதாகக் காட்டும் ஒரு விடியோவைப் பரப்பி வருவதை நாங்கள் கண்டறிந்தோம்.
போதைப்பொருள், கிரிப்டோ, போலி முதலீட்டு ஆலோசனை, , பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றுக்காக டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அறிக்கைகள் உள்ளன. இவை தற்போது தேர்வுகளிலும் எதிரொலிக்கின்றன என்று அபிஷேக் சிங் தெரிவித்தார்.
Summary
NTA Director Abhishek Singh provided an explanation on Tuesday (June 16) regarding the reason for banning the Telegram app in order to properly conduct the NEET re-examination.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலைகளையும், மால்களையும்கூட மூட வேண்டும்! டெலிகிராம் கிண்டல்

நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை!

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!

நீட் விவகாரம்: என்டிஏ இயக்குநரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




