இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ‘டெலிகிராம்’ செயலி பயன்பாட்டை தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வினாத்தாள் கசிவு மோசடி, தோ்வு தொடா்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து என்டிஏ சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: என்டிஏ அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இந்தியாவில் வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் சமூக வலைதளப் பயன்பாட்டை தற்காலிகமாக முடக்க தகவல்தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69ஏ-இன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதுபோல, வினாத்தாள் கசிவு தொடா்பான போலியான ஆதாரங்களை உருவாக்குவதற்கு இந்தச் செயலியில் குறிப்பிட்ட தொழில்நுட்ப வசதி இருப்பதைக் கருத்தில் கொண்டு, டெலிகிராம் செயலியில் ஏற்கெனவே பதிவிடப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியையும் இந்தியாவில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை முடக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறு தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களை ஏமாற்றுவதற்காக மோசடி கும்பல்கள் டெலிகிராம் செயலியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலும், பொது ஒழுங்கு நலன் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.
மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்த 13 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
டெலிகிராம் செயலியை நீக்கிய கூகுள்: மத்திய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் டெலிகிராம் செயலியை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘நீட் தோ்வு நடைபெற உள்ளதையொட்டி வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் நோக்கில், பிளே ஸ்டோரிலிருந்து டெலிகிராம் செயலியை தற்காலிகமாக நீக்குமாறு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில், டெலிகிராம் செயலியை கூகுள் தற்காலிகமாக நீக்கிவிட்டது. ஆப்பிள் நிறுவனமும் விரைவில் நீக்கிவிடும்’ என்றனா்.
Summary
Telegram app restricted ahead of NEET re-exam! Central Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா?

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை ஏன்? என்டிஏ இயக்குநர் விளக்கம்!

நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
இனியும் தொடரக் கூடாது 'நீட்' தேர்வு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




