எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!

நீட் மறுதேர்வு நடைபெறும் ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர் வைக்கப்பட்டிருப்பது பற்றி..

News image

நீட் மறுதேர்வு - File photo

Updated On :8 ஜூன் 2026, 2:08 pm IST

நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் பலரும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் பாதுகாப்பான, யாருக்கும் தெரிவிக்கப்படாத ஓரிடத்தில் வினாத்தாள் தயாரிப்பாளர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஜூன் 21, நீட் மறுதேர்வு முடிவடையும் வரை அவர்கள் அங்கேயே தங்க வைப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க மிகப்பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, ஏற்கனவே நீட் வினாத்தாள் தயாரிப்பாளர்கள் பலரையும் கைது செய்திருக்கிறது. இதன் காரணமாக, நீட் வினாத்தாள் தயாரிப்பவர்களை ரகசியமாக வைக்க தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன், உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இணையதள சேவையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. உலகிலிருந்து இவர்களுக்கு தொடர்பில்லாத வகையில் வைக்கப்பட்டுள்ளனர்.

22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தனை காலமும் வினாத்தாள் தயாரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, தேர்வெழுத வரும் மாணவர்களின் தலைமுடியை பரிசோதித்துக் கொண்டிருந்த தேர்வு முறை பற்றியும் கேள்வி எழுகிறது.

இப்போது நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்வுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்றும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.