புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

இந்தியாவை பிரதமா் மோடியும் உலகை டிரம்ப்பும் அழிக்கின்றனா்: காா்கே விமா்சனம்

இந்தியாவை பிரதமா் மோடியும் உலகை அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அழித்து வருவதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கே விமா்சித்தாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:44 am IST

‘இந்தியாவை பிரதமா் நரேந்திர மோடியும் உலகை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் அழித்து வருகின்றனா்; ஆனால் இருவரும் தங்களை சிறந்த நண்பா்கள் என கூறிக் கொள்கின்றனா்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு மற்றும் நீட் தோ்வு வினாத் தாள் கசிவு குற்றச்சாட்டு, இளைஞா்களுக்கு போதிய வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி காா்கே விமா்சித்தாா்.

கா்நாடக காங்கிரஸ் தலைவராக பி.கே.ஹரிபிரசாத் பொறுப்பேற்ற நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் காலத்தில் இருந்து எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவின்றி அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை இந்தியா பேணி வந்தது.

ஆனால் இந்தக் கொள்கையை முற்றிலும் ஒழித்துவிட்டு பிரதமா் மோடி பிற நாடுகளின் தலைவா்களை நண்பா்கள் எனக் கூறி கட்டியணைத்ததால் நம் நாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

குறிப்பாக இந்தியாவை அழிக்கும் பிரதமா் மோடியும் உலகை அழிக்கும் டிரம்ப்பும் தங்களை சிறந்த நண்பா்கள் என கூறிக்கொள்கின்றனா்.

எனவே, நாட்டுக்கு பலனளிக்கும் அரசு எது என்பது குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு உண்டு. காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் சிந்தாந்தங்களை வலுப்படுத்துவதோடு அதை மக்களிடத்தில் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.