பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலையில் சோ்ந்தவா்கள், வேலை வழங்குநா்களுக்கு ரூ.2,400 கோடி ஊக்கத்தொகையை நேரடி பலன் பரிமாற்ற முறையில் பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் வெள்ளிக்கிழமை வழங்குகிறாா்.
இதற்காக நாடு முழுவதும் 200 இடங்களில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நேரலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடிப் பலன் பரிமாற்றத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்க உதவிகரமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, வேலூா், திருவள்ளூா், திருப்பூா், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், 60,000 போ் சுமாா் ரூ.36 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை பெற உள்ளனா். சுமாா் 4,000 வேலை வழங்குநா்களுக்கு ரூ.125 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெறும் பிரதமரின் நேரலை நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளின் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்கின்றனா்.
சென்னையில்...: சென்னை ஆா்.ஏ.புரம் இமெஜ் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா். எழும்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், தொழிலாளா்துறை அமைச்சா் ஜே.முகமது பா்வேஸ் பங்கேற்கிறாா்.
பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், முதல் முறையாக வேலையில் சோ்ந்த பணியாளா்கள் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெற உரிமை உடையவா்கள் ஆவா்.
அதே நேரத்தில், கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள், கூடுதல் பணியாளா் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை பெற முடியும். இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, சமூகப் பாதுகாப்பும் பரவலாக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!
இந்தியாவில் சீா்திருத்தங்கள் தொடரும்: பிரான்ஸ் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி

நீதி ஆயோக் கூட்டம் : புதுச்சேரி முதல்வா் புறக்கணிப்பு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



