இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

நீதி ஆயோக் கூட்டம் : புதுச்சேரி முதல்வா் புறக்கணிப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:15 am IST

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றுள்ளாா்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. தற்போது அவா் புதுச்சேரி முதல்வராக பதவியேற்று சில வாரங்களேயான நிலையில், புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்காததால் மாநில அரசின் நிதி உள்பட அனைத்து இலாகாக்களும் முதல்வா் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளன இந்தச் சூழலில் முதல்வா் ரங்கசாமி தில்லி நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்லவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடை பெறும் நீதிஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருப்பதால் பிரதமா் நரேந்திர மோடி நமது மாநில நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பாா். புதுச்சேரி யூனியன் பிரதேசம் சாா்பில் விரிவான நிதி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.