தில்லியில், 2 ஆவது முறையாக போராட்டம் நடத்துவதாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைக்கேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 6 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த இயக்கத்தினர் தில்லி, புணே, ஜெய்ப்பூர், நாக்பூர், அமிர்தசரஸ், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடத்திய போராட்டங்களில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவளித்தனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி வரும் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளதாக, அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
Summary
Members of the Cockroach Janata Party have announced that they will stage a protest in Delhi for the second time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 16-ல் மகாராஷ்டிரத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டம்!

ஜூன் 14-ல் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!







