மகாராஷ்டிரத்தின் புணேவில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக வளைதளப் பக்கம் மாபெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.
இந்த இயக்கத்தின் தலைவர் அபிஜித் திப்கே தலைமையில், கடந்த ஜூன் 6 அன்று தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற போராட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைக் கண்டித்து புணேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் இன்று (ஜூன் 11) போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், அபிஜித் திப்கே மற்றும் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோர் கலந்துகொண்டு தலைமை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்திலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் போராட்டம் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கல்வியில் நடைபெறும் முறைக்கேடுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னௌ, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டம் நடைபெறும் என அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.
Summary
Hundreds of young people participated in a protest organized by the Cockroach People's Party in Pune.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி
தில்லியில் கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்! ஐந்து அம்ச திட்டம்!








