வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் வெற்றி!

குஜராத்தில் 4 மாநிலங்களவை இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது குறித்து...

News image

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் தேர்வு... - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 8:46 pm IST

குஜராத்தில் இருந்து பாஜகவின் 4 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர்.

குஜராத்தில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தலில், மாநில ஆளுங்கட்சியான பாஜக சார்பில் ஜிதேந்திரா கன்சாலியா, மன்சின் பர்மர், ராஜேஷ் சுக்லா மற்றும் முகேஷ் ரத்வா ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மற்ற கட்சிகளுக்குப் பெரும்பான்மை இல்லாததால், பாஜக வேட்பாளர்கள் 4 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வானதாக, தேர்தல் அதிகாரி சேதன் பாண்டியா இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் ராம் மொகாரியா, நர்ஹாரி அமின், ரமிலாபென் பரா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் சக்திசின் கோஹில் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நிறைவடைவதால் அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், கடந்த 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியடைந்தது. இதனால், சக்திசின் கோஹிலின் பதவிக்காலம் முடிவடைந்ததும் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கான பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் கட்சி இழப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

All four BJP candidates from Gujarat have been elected unopposed to the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.