கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் வரும் ஜூன் 14 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அபிஜித் திப்கே தொடங்கிய சமூக ஊடகப் பக்கம், இளைஞர்களின் ஆதரவைப் பெற்று பெரும் இயக்கமாக உருவாகியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லி, புணே மற்றும் லக்னௌ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் நடைபெறும் முறைக்கேடுகளைக் கண்டித்து வரும் ஜூன் 14 ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெங்களூரின் ஃபிரீடம் பார்க் பகுதியில் போராட்டம் நடத்தவுள்ளதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் தங்களின் போராட்டம் தொடரும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கூறியிருந்தனர்.
மேலும், இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஏராளமான பிரபலங்களும் ஆதரவளித்திருந்த நிலையில், தில்லி, புணே போராட்டங்களில் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் நேரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Cockroach Janata Party have announced plans to stage a protest in Bengaluru on June 14.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 16-ல் மகாராஷ்டிரத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை அமிர்தசரஸில் போராட்டம்!







