பிகார் பாட்லிபுத்ரா ரயில் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் காவலர் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வெழுதுவதற்காகத் தேர்வர்கள் பலரும் ஒரே நேரத்தில் பாட்னா மற்றும் பாட்லிபுத்ரா ரயில் நிலையங்களில் முண்டியடித்துச் சென்றதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இதனிடையே, ரயிலுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கிய இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் விடியோ வைரலானது.
இதனையடுத்து, மத்திய அரசின் மெத்தனப் போக்கால் இளைஞர் ஒருவர் பலியானதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இளைஞர் உயிரிழந்ததாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் விடியோ போலியானது எனவும், பாட்லிபுத்ரா ரயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவமேதும் நிகழவில்லை எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Clarification: Reports in some media and statement of LoP Shri Rahul Gandhi claiming the death of a student on board a train at Patliputra Station are false.
— Ministry of Railways (@RailMinIndia) June 17, 2026
Based on the circulating video, the person appears to be experiencing a medical condition or fatigue. We have checkedâ¦
Summary
Railways Ministry Rejects Claim After Congress MP Rahul Gandhi Shares Video Of Youth 'Dying' In Overcrowded Train
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










