கேரளத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை ஆளுநர் ஆர்லேகர் தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
சுய-கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த பிறகு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உள்ளடக்கியதாகவும் துல்லியமானதாகவும் அமைத்து அதனைப் பெரும் வெற்றியடையச் செய்ய, இப்பணியில் அனைவரும் முழு மனதுடன் பங்கேற்றுத் தீவிரமாகப் பங்களிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கும் வகையிலான சுய-கணக்கெடுப்பு வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது.
வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் வீடுகளைப் பட்டியலிடுதல், வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில், வீடுகளின் நிலை, அங்குள்ள வசதிகள் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் உடைமைகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவர நடவடிக்கையாகும். கடந்த 150 ஆண்டுக்கால இந்தியக் கணக்கெடுப்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட காகித படிவங்களுக்கு விடை கொடுத்து. இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இது அமைகிறது.
கேரளத்தில் 2027-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2026 ஜூலை 1 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. அதேவேளையில், சுய-கணக்கெடுப்பு ஜூன் 16 முதல் 30 வரை நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டம்: தில்லியில் 2.3 கோடி போ் பதிவு
கிராமிய வாழ்வு, மனித உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்புகள்! பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்

அடுத்தாண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்









