விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

மும்பை: இருக்கை தொடர்பான தகராறில் பயணிக்கு கத்தி குத்து

மும்பையில் உள்ளூர் ரயிலில் இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :12 ஜூன் 2026, 9:20 pm IST

மும்பையில் உள்ளூர் ரயிலில் இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலிருந்து கோபோலிக்கு வியாழக்கிழமை உள்ளூர் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது இருக்கை தொடர்பான தகராறில் பயணி ஒருவரை சக பயணிகள் கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர், மும்பையின் மஸ்ஜித் பந்தர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் பதக் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரயில் வங்கணி ரயில் நிலையத்தைக் கடந்தபோது, ​​சரக்கு வைக்கும் பெட்டியில் அமர்வது தொடர்பாக பதக்கிற்கும் இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறி கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது.

Summary

Two persons have been arrested for allegedly stabbing a man on a running Mumbai local train following a dispute over a seat, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.