தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாட்டின் பணக்கார முதல்வர் யார்? விஜய்க்கு எந்த இடம்?

நாட்டின் பணக்கார முதல்வர்கள் மற்றும் சொத்து மதிப்பு பற்றி...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :4 ஜூன் 2026, 3:20 pm IST

கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார், நாட்டின் மிகப் பணக்கார முதல்வர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

நாட்டின் பணக்கார முதல்வராக ரூ. 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், இரண்டாவதாக ரூ. 648 கோடியுடன் கடந்த மாதம் பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யும் இருந்தனர்.

இந்த நிலையில், ரூ. 1,413 கோடி சொத்து மதிப்புடைய டி.கே. சிவகுமார், நேற்று முதல்வராகப் பதவியேற்றதை அடுத்து, முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யையும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளார்.

கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரமாணப் பத்திரத்தில் டி.கே. சிவகுமார் அறிவித்த சொத்து மதிப்புதான் ரூ. 1,413 கோடி ஆகும். ஆனால், தற்போது மூன்றாண்டுகளாகும் நிலையில், அவரின் நிலங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கக் கூடும்.

அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு ரூ. 332 கோடி என்று தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாநில முதல்வர்கள் சொத்து மதிப்பு

கர்நாடகம் - டி.கே. சிவகுமார் - ரூ. 1,413 கோடி

ஆந்திரம் - சந்திரபாபு நாயுடு - ரூ. 931

தமிழ்நாடு - ஜோசப் விஜய் - ரூ. 648

தெலங்கானா - ரேவந்த் ரெட்டி - ரூ. 30 கோடி

புதுவை - என். ரங்கசாமி - ரூ. 27.99 கோடி

கேரளம் - வி.டி. சதீசன் - ரூ. 6.6 கோடி

ஹிந்தி பேசும் மாநில முதல்வர்கள் சொத்து மதிப்பு

மத்திய பிரதேசம் - மோகன் யாதவ் - ரூ. 42 கோடி

ஜார்க்கண்ட் - ஹேமந்த் சோரன் - ரூ. 25 கோடி

பிகார் - சம்ராத் செளத்ரி - ரூ. 11 கோடி

ஹிமாசல் பிரதேசம் - சுக்விந்தர் சிங் சுகு - ரூ. 7.81 கோடி

ஹரியாணா - நயாப் சிங் சைனி - ரூ. 5.8 கோடி

தில்லி - ரேகா குப்தா - ரூ. 5 கோடி

சத்தீஸ்கர் - விஷ்ணு தேவ் சாய் - ரூ. 3.8 கோடி

உத்தரகண்ட் - புஷ்கர் சிங் தாமி - ரூ. 3.34 கோடி

உத்தரப் பிரதேசம் - யோகி ஆதித்யநாத் - ரூ. 1.54 கோடி

ராஜஸ்தான் - பஜன் லால் சர்மா - ரூ. 1.46 கோடி

ஹிந்தி பேசும் மாநிலங்களின் முதல் 10 பணக்கார முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பைவிட, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு 10 மடங்கு அதிகமாகும்.

Summary

India's wealthiest Chief Ministers and Their Net Worth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.