தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொல்கத்தாவில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மமதா!

மத்திய கொல்கத்தாவில் தர்னா போராட்டத்தைத் தொடங்கிய மமதா..

News image

மமதா தர்னா போராட்டம்! - PTI

Updated On :2 ஜூன் 2026, 4:14 pm IST

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தலைமையில் மத்திய கொல்கத்தாவில் ஒரு நாள் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மமதா பானார்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து மமதா பானர்ஜி இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராணி ரஷ்மோனி சாலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளைக் கொல்கத்தா காவல்துறை நிராகரித்ததைத் தொடர்ந்து, எஸ்பிளனேடில் உள்ள 'ஓய் செனல் பகுதியில் அமைக்கப்பட்ட தர்னா நடைபெறும் இடத்திற்கு மமதா வருகை தந்தார்.

மேடை அமைக்கவோ, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவோ எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, கையடக்க ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்துகிறோம்.

முன்னாள் முதல்வர் பானர்ஜி பேசிக்கொண்டிருந்தபோது, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பியதால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் குழப்பம் நிலவியது.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற புதிய முகங்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், மதன் மித்ரா, டெரெக் ஓ பிரையன், கல்யாண் பானர்ஜி மற்றும் டோலா சென் ஆகியோர் மமதாவுடன் தர்னாவில் கலந்துகொண்டனர்.

அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வெளியேற்றப்படுவது ஆகியவற்றை எதிர்த்து நடைபெறும் இந்தத் தர்ணா போராட்டம், திட்டமிட்டபடி மாலை வரை தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி உறுதிப்படத் தெரிவித்தார்.

Summary

Trinamool Congress supremo Mamata Banerjee on Tuesday started her day-long sit-in in central Kolkata to protest against alleged post-poll attacks on party workers and leaders following the BJP's victory in recent assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.