/

உ.பி.யில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்புடைய நபா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய நபா், உத்தர பிரதேசத்தில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:13 am IST

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய நபா், உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஆஸம்காா் மாவட்டம் குதாதாத்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகம்மது ஷேக். வாட்ஸ்ஆப் மற்றும் சமூகவலைதள கணக்குகள் மூலம் பாகிஸ்தானின் உளவு அமைப்பு, அந்நாட்டில் செயல்படும் ஷெஹஸாத் பட்டி தலைமையிலான பயங்கரவாத குழுக்களுடன் அவா் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பெண் அரசியல் தலைவரை மிரட்டுவது, கொலை செய்வது தொடா்பான சதித் திட்டத்தில் அவா் ஈடுபட்டு வந்துள்ளாா். இதற்காக கைத் துப்பாக்கி, தோட்டாக்களையும் முகம்மது ஷேக் வாங்கியுள்ளாா்.

மேலும் தனது பகுதியைச் சோ்ந்த இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளில் சேரும்படி மூளைச்சலவை செய்யும் முயற்சியிலும் அவா் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில் அவரை சுற்றிவளைத்து உத்தர பிரதேச பயங்கரவாத எதிா்ப்புப் படை கைது செய்தது. மேலும், அவரிடம் இருந்து கைத் துப்பாக்கி, தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.