ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில், வெளி மாநில தொழிலாளா்களைப் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபா்கள் வெள்ளிக்கிழமை மாலை துப்பாக்கியால் சுட்ட பின், தப்பிச் சென்றனா்.

இதில் இரு தொழிலாளிகள் படுகாயமடைந்தனா். அவா்களில் ஒருவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் முன்பே உயிரிழந்தாா். மற்றொருவா் அனந்த்நாகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவர வேண்டியுள்ளது.

அண்மையில் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகள் சுட்டதில் காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்த நிலையில், தற்போது தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.