ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜம்மு காஷ்மீரில் முதல் திரைப்பட விழா..! 50 நாடுகளில் இருந்து 875 படங்கள்!

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக நடைபெற இருக்கும் திரைப்பட விழா குறித்து...

Chief Minister launched the curtain raiser of the first International Film Festival of Jammu & Kashmir, IFFJK 2026, in Srinagar.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் தொடக்கிவைத்த முதல் திரைப்பட விழாவின் அறிமுக விழா. - படம்: எக்ஸ் / ஜம்மு காஷ்மீர் முதல்வர் அலுவலகம்.

Published On :29 ஜூலை 2026, 4:35 pm IST

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக நடைபெற இருக்கும் திரைப்பட விழாவுக்கு இதுவரை 50 நாடுகளில் இருந்து 875 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விழா செப்.7 முதல் 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது.

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் சட்டபிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் கொண்டுவந்த மத்திய அரசு, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1980 வரை சுமாா் 12 திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. பின்னா், திரையரங்க உரிமையாளா்களை இரண்டு பயங்கரவாத கும்பல் அச்சுறுத்தியதால், அவை மூடப்பட்டன.

பின்னா், 1990-களில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 1999 செப்டம்பரில் லால் செளக்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனா்.

பின்னர், மத்திய அரசின் தீவிர முயற்சியினால 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022ல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் டிஐபிஆர் இணைந்து முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் திரைப்பட விழா நடத்துகிறது. இந்த விழாவில் திரையிட இதுவரை 50க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 875 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாளை (ஜூலை 30) வரை இந்தப் படங்களை அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய, சர்வதேச திரைப்பட இயக்குநர்களின் படங்கள் அந்த மக்களுக்கு நம்பிக்கையையும் திரைப்பட தயாரிப்புக்கான களமாகவும் மாற உதவும் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்தத் திரைப்பட விழா நான்கு நாள்களாக நடைபெற இருக்கின்றது. இதில் கலந்துரையாடல், மாஸ்டர்கிளாஸ், கலாச்சார ஈடுபாடுகள், மாணவர்கள் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கும் சினிமா ஆர்வர்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் பெற இந்த விழா உதவுமெனக் கூறப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள படங்களின் மூலம் கலை ரீதியாகவும் கலாச்சாரம் ரீதியான பரிமாற்றம் நிகழும். சினிமாவின் மூலமாக நட்புறவு மற்றும் பரந்துபட்ட புரிதல் இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நடைபெறுமென செய்தித் தொடர்பாளர் பேசினார்.

Summary

Inaugural Jammu and Kashmir international film festival receives 875 entries from 50 countries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.