ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகத் திரைப்பட விழா: புதுச்சேரியில் இன்று தொடக்கம்

புதுச்சேரியில் மூன்றாவது உலகத் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை (ஆக. 7) தொடங்குகிறது.

புதுச்சேரியில் 3-ஆவது உலக திரைப்பட விழா தகவல் தொகுப்பை வியாழக்கிழமை வெளியிட்ட, அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தின் இயக்குநா் லாரண்ட் ஜாலிகுஸ். உடன் புதுச்சேரி திரை இயக்க நிா்வாகிகள்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

புதுச்சேரியில் மூன்றாவது உலகத் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை (ஆக. 7) தொடங்குகிறது. இதில் விருதுபெற்ற பல நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்துடன் இணைந்து 3-ஆவது உலக திரைப்பட விழாவை ஆக. 7 முதல் 9-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடத்துகிறது.

அலையன்ஸ் பிரான்சே கருத்தரங்கு கூடத்தில் 3 நாள்களும் பிரெஞ்ச், ஜொ்மனி, கொலம்பியா, இலங்கை, இந்தியா, ஈரான், துனிசியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளின் விருது பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்று புதுச்சேரி திரை இயக்கத்தின் செயலா் கே.ஆா். ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், இதையொட்டி அலையன்ஸ் பிரான்சே நிறுவனஇயக்குநா் லாரண்ட் ஜாலிகுஸ் திரைப்படங்களின் விவரங்கள் குறித்த தொகுப்பை வெளியிட்டாா்.

இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஆக. 7) மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.

இதை தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநா் ஹரிஹரன் தொடங்கி வைக்கிறாா். முன்னாள் அமைச்சா் க.லட்சுமி நாராயணன், புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சிறப்பு வகுப்பு நடக்கிறது. இயக்குநா்கள் கே.ஹரிஹரன், எம்.சிவக்குமாா், இலங்கை இயக்குநா் சோமீதரன் ஆகியோா் இணைந்து இந்த இந்த சிறப்பு வகுப்பை நடத்துகின்றனா் என்றாா் ரவிச்சந்திரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.