ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டது பற்றி...

 Goods train derails in Odisha's Balangir

கோப்புப்படம்.

Published On :27 ஜூலை 2026, 1:55 pm IST

ஒடிசாவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திங்கள்கிழமை தடம்புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிர் மற்றும் டிட்லாகர் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 11.23 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்.

என்ஜினிலிருந்து 14-வது பெட்டியின் பின்பக்க சக்கர அமைப்பு தண்டவாளத்தை விட்டு விலகியதாக கிழக்குக் கடற்கரை ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தால் எவ்வித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடம்புரண்ட தகவல் கிடைத்தவுடன், கிழக்குக் கடற்கரை ரயில்வேயின் சம்பல்பூர் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அதேவேளையில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள காண்டாபஞ்சியிலிருந்து விபத்து மீட்பு ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தச் சம்பவத்தால் பயணிகள் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A coal-laden goods train derailed in Odisha's Balangir district on Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.