
துருக்கி ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடத்தல்! 6 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?
துருக்கியின் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்... - X
சோமாலியா நாட்டின் கடல்பகுதியில், துருக்கியின் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் உள்ள துருக்கியின் ராணுவப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலை கடந்த திங்களன்று (ஆக. 17) கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக, சோமாலிய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, புண்ட்லாந்து மாகாணத்தின் டாங்கோரோயோ மாவட்டத்தின் அருகிலுள்ள கார்மால் கடற்கரையின் அருகே அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் நிறுத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடத்தப்பட்டது கேமரூன் நாட்டைச் சேர்ந்த எம்/வி லுதூஃப் எனும் கப்பல் என்பதும், அந்தக் கப்பலில் துருக்கியின் ஆயுதங்கள் மற்றும் 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகள் பயணம் செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் தொலைத்தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை சுற்றியிலும் துருக்கியின் 2 படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்தத் தாக்குதலின் விவரங்கள் மற்றும் லுதூஃப் கப்பலின் மாலுமிகள் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் நிலை ஆகியவைக் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that pirates have hijacked a ship carrying Turkish weapons off the coast of Somalia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





