ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் செளரவ் கங்குலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி,பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளது குறித்து...

Sourav Ganguly will host the Bangla Bigg Boss

செளரவ் கங்குலி - Express

Published On :21 ஜூலை 2026, 8:22 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி வங்க மொழியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதனை ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் உருவெடுத்துள்ளது. ஹிந்தி மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 20வது சீசனை எட்டியுள்ள நிலையில், இதனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல்முறையாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்கமொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.

மாநில மொழிகளில் மிகவும் பிரபலமான முகங்களே நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி, மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கு மொழியில் நாகர்ஜுனா, கட்டனத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர். இதேபோன்று முதல்முறையாக வங்க மொழியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தொகுத்து வழங்கவுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 கோடி பார்வையாளர்களை எட்டியுள்ளது. 438 பில்லியன் நிமிடங்கள் பார்வை நேரமாக பதிவாகியுள்ளது. ஜியோ ஹார்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் பார்வையாளர்களின் விகிதம் 47% ஆக அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் மட்டும் 46 பிரிவுகளில் 625 பிராண்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 49 பிராண்டுகள் முதல்முறையாக காட்சி ஊடகத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் நிகழ்ச்சியின் பார்ட்னராகவும் மாறியுள்ளனர்.

Summary

Sourav Ganguly becomes the host of Bigg Boss!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.