ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேலை இல்லை என்பதால் பிக் பாஸ் சென்றேன்: திவ்யா கணேசன்

வேலை இல்லாத காரணத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக நடிகை திவ்யா கணேசன் கூறியுள்ளது குறித்து...

boss winner divya ganesan

திவ்யா கணேசன் - எக்ஸ் / Tentkotta Originals

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:45 pm IST

வேலை இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக நடிகை திவ்யா கணேசன் தெரிவித்துள்ளார்.

சின்ன திரை கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நடிகை திவ்யா கணேசனுக்கு, சின்ன திரையில் இந்த ஆண்டின் பிரபலமான முகம் என்ற விருது வழங்கப்பட்டது. நடிகர் சந்தோஷ் பிரதாப் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய திவ்யா கணேசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அடைந்த மகிழ்ச்சி மற்றும் வாய்ப்பு குறித்து பேசினார்.

திவ்யா கணேசன் பேசியதாவது:

''பிக் பாஸ் செல்வதற்கு முன்பு போக வேண்டுமா? என நினைத்தேன். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பயம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அப்போது எனக்கு வேலை இல்லை. வந்த வேலை இதுதான் என பிக் பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றேன்.

பிக் பாஸ் செல்வதற்கு 4 நாள்களுக்கு முன்புதான் எனக்கு இது குறித்து தெரியும். அந்த அனுபவம் அற்புதமானது.

நம்ம குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு நாம் யார் என்று தெரியும். ஆனால் உலகில் உள்ள அனைவருக்குமே திவ்யா என்பவள் இப்படிப்பட்டவள் என கூறும்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என நெகிழ்ச்சியுடன் திவ்யா குறிப்பிட்டார்.

Summary

I went to Bigg Boss because I didn't have job Divya Ganesan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.