ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் மாயா கிருஷ்ணன்!

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை நடிகை மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளது குறித்து...

Maya Krishnan

மாயா கிருஷ்ணன் - இன்ஸ்டாகிராம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:40 pm IST

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை நடிகை மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட இவர், தற்போது ரசிகர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கும் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி, 9 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் போட்டியையும், ஒவ்வொரு போட்டியாளரையும் பார்வையாளர்கள் நன்கு கவனிப்பதால், போட்டி குறித்த புரிதல் பொதுமக்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

போட்டியை நன்கு புரிந்துகொண்ட பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, பிக் பாஸ் காமன்மேன் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் vijay.jiostar.com என்ற தளத்தில் உங்களில் சுய விவரங்களையும், ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் 2 நிமிட விடியோவாகப் பதிவு செய்ய வேண்டும்.

இதில் தகுதியானவர்கள் நிகழ்ச்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்தவர்கள், இனிமேல் விளையாடலாம் என நடிகரும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு விடை அளிக்கும் வகையில் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Summary

actress Maya Krishnan to host the Bigg Boss Common Man show in Vijay TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.