ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு: ஜூலை 20-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவிப்பு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப்பேரணி...

cjp peaceful rally

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே... - Instagram/cjp

Published On :9 ஜூலை 2026, 3:58 pm IST

நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி வரும் ஜூலை 20 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை.

தில்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து தில்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி அமைதிப்பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

CJP has announced that a peaceful rally will be held on July 20 to demand that the Central Government take responsibility for the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.