ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதம்!

சோனம் வாங்சுக்குடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது குறித்து...

Sonam wangchuk

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து ஆர்வலர் சோனம் வாங்சுக் 18 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்... - Instagram/CJP

Published On :15 ஜூலை 2026, 6:06 pm IST

தில்லியில், ஆர்வலர் சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூலை 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சோனம் வாங்சுக் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தொடர்ந்து, 18 நாள்களாக உண்ணாவிரதம் கடைபிடித்து வரும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சோனம் வாங்சுக் உடன் இணைந்து நாளை (ஜூலை 16) ஒருநாள் மட்டும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக, அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்வரா பாஸ்கர், திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி எம்பி பிரியா சரோஜ் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், வரும் ஜூன் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து நாடாளுமன்றம் நோக்கி அமைதிப்பேரணி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cockroach janata Party have announced that they will stage a hunger strike in Delhi tomorrow, joining hands with activist Sonam Wangchuk.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.