ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சோனம் வாங்சுக் உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ள வேண்டும்! சிஜேபி கோரிக்கை

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளளது பற்றி...

Sonam Wangchuk, Abhijit Dipke

சோனம் வாங்சுக், அபிஜீத் தீப்கே - படம் - தினமணி

Published On :22 ஜூலை 2026, 4:36 pm IST

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர்.

இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சோனம் வாங்சுக் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். இருப்பினும், தற்போது வரை அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இதுகுறித்து கரப்பான்பூச்சி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். உங்களது தியாகம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தூண்டுதலை அளித்துள்ளது.

கடந்த ஜூலை 20 அன்று உங்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் ஆதரவாக நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் பயணம் செய்து வந்தனர். இந்தப் போராட்டம் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது என்பதையும் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் நீங்கள் காட்டியுள்ளீர்கள்.

ஆனால், தற்போதுள்ள சூழலில் உங்களுடைய உடல்நிலை மீது நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதால் எங்களுடைய இந்தப் போராட்டம் ஓயாது என நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை, நீதி கிடைக்கும் வரை நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Members of the 'Cockroach People's Party' have demanded that Sonam Wangchuk end his hunger strike.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.