வயநாட்டில் உள்ள கல்லாடி சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைத்து மேற்கொள்ளுமாறு முதல்வர் வி.டி. சதீசன் உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வயநாடு மாவட்டம் கல்லாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பெரியளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதில் இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வயநாடு, மெப்பாடி அருகிலுள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிலர் மண்ணுக்குள் புதைந்ததாக அச்சம் நிலவுகிறது.
இதுகுறித்து, முதல்வர் வி.டி. சதீசன் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைத்து மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, இந்த நிலச்சரிவில் இதுவரை ஐந்து பேர் சிக்கி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
In the wake of the landslide at the Kalladi tunnel project site in Wayanad, Chief Minister V D Satheesan on Tuesday held an urgent meeting with ministers from the district and directed that rescue and relief operations be coordinated on a war footing, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












