அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பற்றி...

News image

வயநாட்டில் நிலச்சரிவு - x

Updated On :7 ஜூலை 2026, 12:40 pm IST

வயநாடு மாவட்டம் கல்லாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை பெரியளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயநாடு மாவட்டம், மெப்பாடி அருகிலுள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் மீனாட்சி பாலம் அருகே இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிலர் மண்ணுக்குள் புதைந்ததாக அச்சம் நிலவுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கப்பாதை அமைக்கும் பணியாளர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து உள்ளுர் மக்கள் உதவியுடன் இதுவரை ஐந்து பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் சில வீடுகளும், விடுதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சுரங்கப்பாதை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

கேரள அமைச்சர் டி. சித்திக் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தில் தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Summary

Landslide in Wayanad! Intensive efforts underway to rescue those trapped!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.