புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாட்டின் தூதர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தங்களுடைய நற்சான்றிதழ்களை திங்கள்கிழமை (ஜூலை 6) சமர்ப்பித்தனர்.
மங்கோலியா, மொசாம்பிக், நிக்கராகுவா, சுரினாம், கேபான், மற்றும் பகாமாஸ் ஆகிய ஆறு நாட்டின் தூதர்களிடமிருந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்.
நற்சான்றிதழ்கள் என்பது ஒரு நாட்டின் தூதர் மற்றொரு நாட்டில் தனது அதிகாரபூர்வ பணியைத் தொடங்குவதற்கு முன்னர், தனது நாட்டின் தலைவரிடமிருந்து சான்றிதழ் பெற்று அதனை தான் பணி செய்யப்போகும் நாட்டின் தலைவரிடம் சமர்ப்பிக்கும் முறையாகும்.
ஏற்கெனவே, பதவி வகித்து வந்த தூதரின் பதவிக்காலம் முடிந்த பிறகு அந்தந்த நாடுகள் புதிய தூதரை நியமிக்கும். புதிய தூதர் பொறுப்பேற்கும் நாட்டுக்கு வந்ததும், அந்நாட்டின் குடியரசுத் தலைவரை (ராஷ்டிரபதி பவனில்) நேரில் சந்தித்து இக்கடிதத்தை முறைப்படி வழங்குவார்.
இதன்மூலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அந்தத் தூதர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முழுத்தகுதி உடையவர் என்பது உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
President Droupadi Murmu received credentials from Dr. Ulziit Luvsanjav, Ambassador of Mongolia; and Mr. Peter Nicholas Symonette, High Commissioner of the Commonwealth of The Bahamas, at Rashtrapati Bhavan. pic.twitter.com/hU2Zy0glUR
— President of India (@rashtrapatibhvn) July 6, 2026
President Droupadi Murmu received credentials from Mr. Armando Pedro Muiuane Junior, High Commissioner of the Republic of Mozambique; Ms. Nadeska Imara Cuthbert Carlson, Ambassador of the Republic of Nicaragua; Mrs. Hanisha Jairam, Ambassador of the Republic of Suriname; and Mr.⦠pic.twitter.com/3lRCnRDDzD
— President of India (@rashtrapatibhvn) July 6, 2026
Summary
Ambassadors from six countries presented their credentials to President Droupadi Murmu on Monday (July 6).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு

பத்ம விருதுகள் 2026 - புகைப்படங்கள்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



