ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா நாடுகளுக்கு புறப்பட்டாா் குடியரசுத் தலைவா் முர்மு

மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் குறித்து...

President Droupadi Murmu embarks on 3-nation visit

மாசிடோனியா, ருமேனியா நாடுகளுக்கு புறப்பட்டாா் குடியரசுத் தலைவா் முர்மு - கோப்புப்படம்

Published On :19 ஜூலை 2026, 8:04 pm IST

புது தில்லி: மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தில்லியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றாா்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். தனது பயணத்தின் முதல் கட்டமாக, குடியரசுத் தலைவர் முர்மு மால்டோவாவைச் செல்கிறார்.

ஐரோப்பிய நாடுகளான மால்டோவா, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவா் பயணிப்பது இதுவே முதல்முறையாகும். ருமேனியாவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவா் செல்கிறாா்.

இந்த பயணத்தின்போது, ​​மால்டோவா அதிபர் மையா சாண்டு, நாடாளுமன்ற தலைவா் ஈகோா் கிரோஸு ஆகியோரை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மேலும், மால்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புறவுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது, வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்திலும் உரையாற்றுவது மற்றும் அந்நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

வேளாண்மை, சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி போன்ற முன்னுரிமைத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் குடியரசுத் தலைவரின் மால்டோவா பயணம் வரலாற்றுச்சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும்.

பயணத்தின் இரண்டாம் கட்டமாக, ஜூலை 21 முதல் 22 வரை வடக்கு மாசிடோனியா பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு, அந்நாட்டு அதிபா் கோா்டானா சிலிஜானோவ்ஸ்கா-தவ்கோவாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிரதமா் ஹிரிஸ்டிஜன் மிகோஸ்கி, நாடாளுமன்றத் தலைவரை சந்திப்பதுடன், அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளாா். மேலும், இந்தியா-வடக்கு மாசிடோனியா வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளாா்

வேளாண்மை, மருந்து தயாரிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்(ஐடி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் போன்ற முன்னுரிமைத் துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இரு தரப்பினரும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் பயணம் மேலும் உத்வேகமளிக்கும்.

இறுதிக்கட்டமாக, தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவுக்கு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். ஜூலை 23 முதல் 25 வரை ருமேனியா செல்லும் முர்மு, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். இந்த பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் நிகுசோா் டான், இடைக்காலப் பிரதமர் இல்லி போலோஜன், செனட் சபைத் தலைவர் மற்றும் ருமேனியா-இந்தியா நாடாளுமன்ற நட்புறவுக் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறார். மேலும், இந்தியா-ருமேனியா வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்திலும் உரையாற்றுவதுடன், இந்தியச் சமூகத்தினருடன் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கான குடியரசுத் தலைவரின் பயணம், மத்திய-கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் உத்திசாா் கூட்டுறவு விரிவாக்கத்தை பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சக செயலா் (மேற்கு பிரிவு) சிபி ஜாா்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் மூலம் வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புத்தாக்கம், கல்வி மற்றும் இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் மேற்கண்ட நாடுகளுடன் இந்தியாவின் உறவுகள் வலுப்படும். இந்த மூன்று நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளுக்கு இந்த பயணம் புதிய உத்வேகம் அளிக்கும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மேற்கண்ட மூன்று நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு வலுவான ஆதரவையும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

President Droupadi Murmu today embarked on a three-nation visit to Moldova, North Macedonia and Romania. On the first leg of her visit, President Murmu will reach Moldova.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.