ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆழமான சிந்தனைகளின் உள்ளடக்கம்! - குடியரசுத் தலைவரின் உரைக்கு பிரதமர் பாராட்டு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்...

pm modi - president murmu

பிரதமர் மோடி - குடியரசுத் தலைவர் முர்மு - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 9:45 pm IST

சுதந்திர நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் வரும் சனிக்கிழமை (ஆக. 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் முர்மு வெள்ளிக்கிழமை மாலை சிறப்புரை ஆற்றினார்.

நாட்டின் வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், பொதுத் தேர்வுகளைச் சீரமைக்கும் நடவடிக்கை, ஆபரேஷன் சிந்தூர், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றிய உரை ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கி இருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“சுதந்திர நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை ஊக்கமளிப்பதுடன், ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் இருந்தது.

அவரது கருத்துகள் நம் நாட்டின் வலிமையையும், ஒவ்வொரு இந்தியரின் கனவுகளையும் வெளிக்காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்பட அவரது செய்திகள் ஊக்கமளிக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

Summary

PM Modi has praised the address delivered by President Murmu to the nation on the occasion of Independence Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.