திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலரின் ராஜிநாமாக்கள் தொடரும் என்று பாஜக தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான திலிப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மமதா ஆதரவு அணி, அதிருப்தி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது.
இதையடுத்து, மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வந்த சந்திரிமா பட்டாச்சார்யா நேற்று (ஜூலை 4) தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பாஜக தலைவர் திலிப் கோஷ் பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸில் ராஜிநாமாக்கள் தொடரும் ஒரு போக்கு நிலவுகிறது. கட்டாயம் அது தொடரும். கட்சியே இல்லாதபோது, யார் ராஜிநாமா செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது கடினம்தான்.
சந்திரமா பட்டாச்சார்யா இத்தனை ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்தார். ஆனாலும் அவருக்கு பட்ஜெட் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
அதனால்தான் மேற்கு வங்கம் மோசமான நிலைக்குப் போனது. அதன் மோசமான நிலைக்குக் காரணம் இந்த பைத்தியக்காரத்தனம்தான். இப்போது கட்சி முடிந்துவிட்டதால், ராஜிநாமா செய்துவிட்டு நன்றாகப் பேசுகிறார் என்று திலிப் கோஷ் தெரிவித்தார்.
Summary
BJP leader and West Bengal Minister Dilip Ghosh stated on Sunday (July 7) that resignations by many including Trinamool Congress MLAs, Members of Parliament, and party functionaries would continue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தீவிரமடையும் திரிணமூல் உள்கட்சி மோதல்! சின்னம், பெயருக்கு உரிமைகோரும் அதிருப்தி பிரிவு!

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

மக்களவையிலும் உடைகிறதா மமதாவின் திரிணமூல் காங்.?
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





