வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பற்றி...

News image

மமதா பானர்ஜி. - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 3:35 pm IST

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன.

இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மூலம் சந்தேகத்துக்கிடமான வகையில் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அக்கட்சியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், அந்தக் கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த நிதியை வெளியிடுமாறு தனியார் வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி, கட்சியின் வங்கிக் கணக்குகளில் ரூ. 440 கோடி பணம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ஐ-பேக் அலுவலகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Enforcement Directorate officials are conducting raids on Tuesday (July 7) at premises belonging to the Trinamool Congress party in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.