வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்

இந்தியா - இஸ்ரேல் இடையே இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் முழுமையாக அமலுக்கு வந்ததாக மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூலை 2026, 6:27 am IST

இந்தியா - இஸ்ரேல் இடையே இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் முழுமையாக அமலுக்கு வந்ததாக மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முதலீட்டு ஒப்பந்தம் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதி தில்லியில் கையொப்பமானது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதையும், முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அபகரிப்பு அல்லது தேசியமயமாக்கல் போன்ற ஆபத்துகளிலிருந்து முதலீட்டாளா்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சச்சரவு தீா்வு, முதலீட்டாளா் - அரசுக்கு இடையேயான தகராறுகளைத் தீா்க்க வலுவான நடுவா் மன்ற அடிப்படையிலான வழிமுறையை வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தற்போது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவதும் முயற்சியில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சா்வதேச முதலீட்டுச் சட்டத்தின் நவீன கோட்பாடுகள் மற்றும் பரிணாமம் அடைந்துவரும் சட்டவியல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒப்பந்த சரத்துகள் அமைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.