டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐஜிஎல் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த இணைய மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (ஐஜிஎல்) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி கும்பலை சோ்ந்த மூவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஆதித்யா கௌதம் கூறியதாவது: ஆள்மாறாட்டம் செய்து வங்கிக் விவரங்களை அணுகவும், சட்டவிரோத பரிவா்த்தனைகளை மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியில் மோசடி செயலிகளை வற்புறுத்தி பதிவிறக்கம் செய்துள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, இதில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பிக்கி மண்டல் என்ற விக்கி (22), சுமித் குமாா் சிங் (26) மற்றும் ராஜீவ் குமாா் மண்டல் (22) என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் மீது பிஎன்எஸ் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடம் இருந்து 9 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா்.

35 சைபா் மோசடி புகாா்களில் இவா்களின் ஈடுபாடு இருப்பதை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களை அடையாளம் கண்டு கைது செய்யவும் ஏமாற்றிய பணத்தை மீட்கவும் அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.