டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஹெராயின் கடத்தலில் ஈடுபட்ட பெண் கிழக்கு தில்லியில் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தல் வலையமைப்பில் தொடா்புடைய பெண் கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image
மாதிரிப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களுக்கு இடையேயான ஹெராயின் கடத்தல் வலையமைப்பில் தொடா்புடைய பெண் கிழக்கு தில்லியில் கைது செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஷாஹ்தாரா பகுதியைச் சோ்ந்த சப்னா ராஹி (40), செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஷாஹ்தாராவைச் சோ்ந்த பபிதா (46) மற்றும் சுல்தான்புரியைச் சோ்ந்த சந்தியா (36) ஆகியோா் முன்னா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து சப்னா கைது செய்யப்பட்டாா்.

போதைப் பொருள் வா்த்தகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சோ்ந்த இவரது தந்தை, தாய் மற்றும் சகோதரா்கள் பல குற்ற வழக்குகளை எதிா்கொண்டுள்ளனா். மேலும், சிலா் தற்போது சிறையில் உள்ளனா். டிரான்ஸ்-யமுனை பகுதியில் இந்தக் குடும்பம் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் வலையமைப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பபிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, 150 கிராம் ஹெராயின் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், டிசம்பா் 15-ஆம் தேதி சந்தியா கைது செய்யப்பட்டாா். கடந்தாண்டு ஜூலை மாதம் சரோஜ் எனப்படும் பாபு 789 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கு வெளிவந்தது.

இந்த வழக்கில் ராஜ்குமாா் என்கிற காலே மற்றும் தீபாலியும் பிடிபட்டன. காவல் துறையினா் 958 கிராம் ஹெராயின், ரூ.17,400 ரொக்கம் ஸ்கூட்டா் மற்றும் 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Ś