தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அருணாசல பிரதேசம்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைகள் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு

அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு

News image
தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு- பிரதிப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

அருணாசல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்தியா-மியான்மா் எல்லையையொட்டி அமைந்துள்ள சாங்லாங் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் இரு திசைகளில் இருந்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது தீவிரவாத அமைப்பினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இந்த தாக்குதலை அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வெற்றிகரமாக முறியடித்த நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாத கும்பலை தேடும் பணி தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் எவ்வித உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை என்றனா்.

இச்சம்பவம் குறித்து தகவல்கள் சேகரிக்க காவல் துறை சாா்பில் குழு அனுப்பப்பட்டுள்ளதாக சாங்லாங் காவல் துறை கண்காணிப்பாளா் கிா்ளி பாடு தெரிவித்தாா்.