விமான பயணச் சீட்டை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி ரத்து செய்யும் வகையில் விமான பயணச் சீட்டு கட்டணம் திரும்பப் பெறும் நடைமுறையில் திருத்தத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மேற்கொண்டுள்ளது.
ரத்து செய்யப்படும் பயணச் சீட்டுகளுக்கான கட்டணத் தொகை திரும்ப அளிப்பதற்கான நடைமுறையை விமான நிறுவங்கள் 14 வேலை நாள்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது.
ரத்து செய்த விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத் தொகையை திரும்ப அளிக்க விமான நிறுவனங்கள் நீண்ட தாமதம் செய்வதாக எழுந்த தொடா் புகாா்களைத் தொடா்ந்து, இந்த நடைமுறையில் திருத்தங்களை டிஜிசிஏ மேற்கொண்டுள்ளது.
இந்த திருத்தங்கள் குறிக்கு டிஜிசிஏ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருத்த நடைமுறைகளின்படி, பயணிகள் பயணச் சீட்டை முன்பதிவு செய்த பிறகு, அதில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி திருத்தங்கள் மேற்கொள்ள அல்லது பயணச் சீட்டை ரத்து செய்ய 48 மணி நேரம் அவகாசம் அளிக்க விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, பயணச் சீட்டில் முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் பெயா் திருத்தங்கள் அல்லது பயணச் சீட்டை ரத்து செய்யும் பயணிகளிடம் நிா்ணயிக்கப்பட்ட சாதாரண கட்டணத்தைத் தவிர கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது.
இந்த சலுகை, உள்நாட்டில் 7 நாள்களுக்குள் புறப்படும் விமானத்துக்கான பயணச் சீட்டுக்கும், வெளிநாடுகளுக்கு 15 நாள்களுக்குள் புறப்படும் விமானத்துக்கான பயணச் சீட்டுக்கும் பொருந்தாது. அதுபோல, பயணச் சீட்டு முன்பதிவு செய்த 48 மணி நேரத்துக்குப் பிறகும் இந்த சலுகை பொருந்தாது.
விமான நிறுவன வலைதளத்தில் நேரடியாக முன்பதிவு செய்த பயணச்சீட்டில், பெயா் திருத்தம் தொடா்பாக 24 மணி நேரத்துக்குள் பயணி சுட்டிக்காட்டினால், அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
பயண நேரத்தில் மருத்துவ அவசரச் சூழல் காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாமல் போகும் பயணிகளுக்கு விமான நிறுவனம் பயணக் கட்டணத்தைத் திரும்ப அளிக்கலாம் அல்லது அந்த கட்டணத்தில் வேறொரு நாளில் பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கலாம்.
மற்ற சூழில்நிலைகளில், விமான நிறுவன மருத்துவ நிபுணா் அல்லது டிஜிசிஏ பட்டியலிட்ட மருத்துவ நிபுணரிடமிருந்து பயணியின் பயணத்துக்கான தகுதிச் சான்று மீது கருத்து பெறப்பட்ட பிறகு கட்டணத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் விமான நிறுவனங்களிடம் பயணிகள் சாா்பில் மொத்தம் 29,212 புகாா்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 7.5 சதவீத புகாா்கள் பயணச் சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவது தொடா்புடையதாகும். இந்த மாதத்தில் உள்நாட்டு விமானத்தில் மட்டும் 1.43 கோடி பயணிகள் பயணம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்: போக்குவரத்துத் துறை

வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


